ஆடிப்பூரத்தினை முன்னிட்டு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகருக்கு காய்கறி அலங்கார பூஜை

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (15:00 IST)
திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.



ஆடி மாதம் நம் தமிழக கோவில்கள் திருவிழா போல் களை கட்டி இருக்கும் மாதம். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என்ற வரிசையில் ஆடி அமாவாசையை அடுத்து வரும் மிகப்பெரிய அம்மன் விழா ஆடிப்பூரம் ஆகும். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி மாதம் அன்றுபூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் அவதரித்த நாள். ஆண்டாள் ஜெயந்தி 27 நட்சத்திரங்களில் பூரம் ஒன்று. ஸ்ரீரங்கநாதரிடம் ஆண்டாள் கொண்ட பக்தியினை நாடே அறியும்.

இந்நிலையில் கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று ஆடிப்பூரத்தினை முன்னிட்டு மூலவர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகருக்கு காய்கறி அலங்காரங்கள் செய்யப்பட்டது. மூலவருக்கு விஷேச தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் அருள் பெற்றனர்.

வீடியோவை காண
 
சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்