திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்

செவ்வாய், 6 டிசம்பர் 2022 (07:31 IST)
திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்
திருவண்ணாமலை கோவிலில் இன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டதால் பக்தர்கள் பரவசமாக தரிசனம் செய்து வருகின்றனர். 
 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தினத்தன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று கார்த்திகை தினத்தை ஒட்டி அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் ஏற்றும் நிகழ்வை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் கிருத்திகையை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் சுவாமி கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவண்ணாமலை மலையில் இன்று 2,668 உயரத்தில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது என்பதும் இதை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்