கையில் துப்பாக்கியுடன் மேடையில் தோன்றிய பாஜக பிரமுகர் – அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (15:23 IST)
தமிழக பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதுரையில் பாஜக கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ், கையில் துப்பாக்கியை உயர்த்திக் காட்டியபடி கட்சியினர் சூழ நிற்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவிக்க, பாஜகவினரோ கூட்டத்துக்கு வந்த தொண்டர்கள் அன்பளிப்பாக அளித்த துப்பாக்கி அது என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்