இரவு நேர பேருந்து ஓட்டுனர்களே கவனம்: தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்!

ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (14:07 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பேருந்துகள் ஓடத் தொடங்கி விட்டன. மேலும் நாளை முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஓடும் என்பதால் இரவு நேர பேருந்துகளும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் லாக்டவுன் காரணமாக கடந்த 5 மாதங்களாக இரவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசுவெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது 
 
கடந்த 5 மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் ஓட்டுனர்கள் இரவு நேரத்தில் பேருந்தை கவனமாக இயக்க வேண்டும். மேலும் இரவு 12 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை நடத்துனர்கள் கண்டிப்பாக இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணிபுரிய வேண்டும்
 
வழித்தடங்களில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவதால் கவனமாக பேருந்துகளை இயக்க வேண்டும். வழித்தடங்களில் பேரிகேடுகள் அதிகமாக உள்ளதால் கவனமாக பணிபுரிய வேண்டும். நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் கவனமாக பணிபுரிய வேண்டும்
 
இவ்வாறு ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்