அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கமலா ஹாரிஸ் பிறக்கும்போதே பைத்தியம் என்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், டிரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகிய இருவரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், சமீபத்தில் டிரம்ப் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கமலா ஹாரிஸ் பிறக்கும்போதே அப்படித்தான் என்று கடுமையாக விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை பாதுகாப்பு விவகாரங்களில் வைட்டமின் நிர்வாக தன்மையை மிக கடுமையாக சாடியதுடன், கமலா ஹாரிஸ் பேச்சுக்கு குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களே அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறினார். "