வடகிழக்கு பருவமழையின் போது ஒரு உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
காலம் நிலை மாற்றத்தால் ஒரே நேரத்தில் மொத்தமாக பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க, வானிலை தகவல்களை உடனுக்குடன் வழங்க கூடிய தரம் உயர்த்தப்பட்ட செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 1,400 தானியங்கி மழைமானி மற்றும் 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என்பதால் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
துல்லியமான வானிலை ஆய்வு செய்திகளின் மூலம் பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழையின் போது ஒரு உயிரிழப்பும் ஏற்படாதவாறு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.