ஜீரோ என்பதற்கு இதுதான் விடை.. சென்னை மாநகர போலீஸ் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (20:20 IST)
கடந்த சில நாட்களாக சென்னை நகரம் ஜீரோ இஸ் குட் என்ற பதாகை  பரபரப்பாக காணப்பட்ட நிலையில் ஜீரோ என்பதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஜீரோ ஆக்ஸிடெண்ட் டே என்று சென்னை மாநகர காவல் துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

சாலையில் பாதுகாப்பான பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக யூ வளைய திருப்பங்கள், ஒரு வழி பாதை ,புதிய வேக வரம்புகள், பள்ளியில் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் ஜீரோ இஸ் குட் என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு 20 நாட்கள் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் விதிமீறல், அபராதம், விபத்து ,உயிரிழப்பு இல்லாத அதாவது இவையெல்லாம் ஜீரோவாகும் என்பதை மையமாகக் கொண்டுதான் இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் இல்லாத தினம், உயிரிழப்பு இல்லாத தினம்,விதிமிரல் இல்லாத தினம்,விதிமிரல் என்பதை சென்னை நகரில் கொண்டு வர வேண்டும் என்று போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்