உடல்நலக்குறைபாடு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. அவரை சந்திக்க சசிகலா தரப்பு ஆளுநர், அமைச்சர்கள் உட்பட யாரையும் அனுமதிக்காததே அதற்கு காரணமாகும்.
ஜெ. மருத்துவமனையில் இருந்த போது மூன்று நாட்கள் மட்டுமே சுயநினைவில் இருந்தார். அவரை பார்க்க யாரையும் சசிகலா தரப்பு யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால், அவரை சசிகலா நன்றாக கவனித்துக்கொண்டார். ஜெ.விற்கு மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக என்னிடம் எந்த ஆவணத்திலும் மருத்துவமனை நிர்வாகம் கையெழுத்து பெறவில்லை. ஆளுநர் வித்யாசகர் வந்த போது கூட ஜெயலலிதா சுய நினைவின்றிதான் இருந்தார்.