எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? தமாக யுவராஜா விளக்கம்

Siva
திங்கள், 26 பிப்ரவரி 2024 (15:57 IST)
தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை நன்றி தெரிவிக்க சந்தித்தேன்  என த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் த.மா.கா. இணைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை யுவராஜா சந்திக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்று இணைந்து குரல் கொடுத்துள்ளோம்

அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம். திரு ஜே கே வாசன் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி என்று பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள்

பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வந்துள்ளேன்

 இவ்வாறு யுவராஜா விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்