100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர் கைது

Webdunia
புதன், 3 மே 2017 (16:10 IST)
கடலூர் மாவட்டத்தில் பழைய கிழக்கிந்திய கம்பெனி 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விறக முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த நல்லதம்பி, தன்னிடம் இளைஞர் ஒருவர் பழைய ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்துற்கு விற்க அனுகியதாக காவல்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து அந்த இளைஞர் நல்லதம்பியிடம் பேரம் பேசியபோது காவல்துறையினர் கைது செய்தனர். பழைய கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட அரிய வகை 100 ரூபாய் நோட்டு என்று கூறப்படுகிறது.
 
அந்த ரூபாய் நோட்டிற்கு பின்புறம் கழுகு படம் இருக்கும். இந்த ரூபாய் மிகவும் அரிய வகை என்றும் இதற்கு விலை மதிப்பு அதிகம் என்று அண்மையில் சிறுது காலமாக இணையதளங்களில் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இந்த ரூபாய் நோட்டை விற்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்