மூன்றாவது மாடியில் இருந்து குதித்து சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் எழுதி வைத்த கடிதத்தில் தனது உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தது.
சென்னை தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆயிஷா என்ற மாணவி, கடந்த 12ஆம் தேதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், அவர் எழுதி வைத்த கடிதத்தில், தன்னுடைய இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கவும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில், அவர் தேர்வு எழுத இருந்த ஹால் டிக்கெட்டை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.