மது ஒழிப்பு மாநாடு நடத்தியவர் பார் உடன் கூடிய கிளப்பை திறந்து வைப்பதா? திருமாவளவனுக்கு கேள்வி..!

Siva

ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (11:56 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது ஒழிப்பு மாநாடு நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் பார் உடன் கூடிய கிளப் ஒன்றை திறந்து வைத்திருப்பது அவரது சொந்த கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சென்னை புழல் பகுதியில் உள்ள தனியார் கிளப்பை திறந்து வைத்தார். இந்த கிளப் சசிகலாவின் உறவினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

சென்னை புழல் ஜெயிலுக்கு சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிளப்பின் அருகே பழமையான சிவன் கோயிலும் பள்ளியும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிளப்பை திருமாவளவன் திறந்து வைக்க ஒப்புக்கொண்டது அவரது சொந்த கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மது ஒழிப்பு மாநாடு நடத்திவிட்டு, இப்போது மதுவை ஆதரிக்கும் வகையில் பார் உடன் கூடிய கிளப்பை திறந்து வைப்பதா என கட்சி தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் திருமாவளவன் பார் உடன் கூடிய கிளப்பை திறந்து வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரைவில் திருமாவளவன் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்