விநாயகர் சிலையை கரைக்கும்போது ஏற்பட்ட விபரீதம்.. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (16:57 IST)
சமீபத்தில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி நடந்து வருகிறது. 
 
இந்த நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர் 
 
இந்த நிலையில் விநாயகர் சிலையை கரைத்துக் கொண்டிருந்த பாரதி என்ற இளைஞரை திடீரென ஆற்று நீர் அடித்து சென்றது. இதனை அடுத்து தீயணைப்பு துறை தகவல் கொடுக்கப்பட்டு ஒரு மணி நேரம் பாரதியை தேடினார். அதன் பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டது.  
 
இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்