தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தது போல், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன், 2014 நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தது போல், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம், தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவியது. குறிப்பாக, மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் டெபாசிட் கூட வாங்கம முடியாமல் போனது. இதுதான் பதவி பறிப்பு காரணமாக அமையும் என கூறப்படுகிறது.