ஜாக்கிரதை: மனதை படம் பிடித்து காட்டும் இயந்திரம்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (06:54 IST)
மனிதர்களின் மனதை படித்து அதனை உருவப் படங்களாக உருமாற்றும் இயந்திரத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.


 

 
இத்தகைய நவின உலகில் பிறரின் மனதை படிக்கும் திறனுடைய இயந்திரம் ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
 
அமெரிக்காவின் ஓரிகான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் மற்றும் மருத்துவத்துறை மாணவர்கள்  "மூளை ஸ்கேன்" முறையை அடிப்படையாக கொண்டு மனித எண்ணங்களை பிரதியெடுத்து அதனை காட்சிகளாக படம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
 
இக்கண்டுபிடிப்பின் மூலம், தாக்கிவிட்டு தப்பிக்கும் திருடர்கள் உள்ளிட்டவர்களின் படங்களை மூளையின் நினைவு படிமங்களை அடிப்படையாக கொண்டு வரைந்து அவர்களை அடையாளம் காண முடியும். மேலும், பல்வேறு முக்கிய காரியங்களுக்கு இக்கண்டுபிடிப்பு உபயோகப்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்