ஸ்டெர்லைட் ஆலையை நம்பி தூத்துக்குடியில் பல சிறிய தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. தற்போது ஆலை மூடப்பட்டதால் போதிய மூலப்பொருட்கள் கிடைக்காமல் மூடி கிடக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக போராட்டகாரர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்கள் அன்னிய சக்திகளின் கைகூலியாக செயல்படுகிறார்கள். ஆலையால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை நீதிமன்ற உத்தரவு படி உடனடியாக திறக்கப்பட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.