ரஜினியை கேள்வி கேட்ட இளைஞர் கைது: போராட்டகளமான தூத்துக்குடி

வெள்ளி, 18 ஜனவரி 2019 (15:31 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்தப்பட்ட பேரணியில் கலவரம் உண்டாகி 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கலவரத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தோருக்கும் பல தரப்பினர் ஆறுதல் தெரிவித்தனர். 
 
அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடிக்கு சென்று அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். பெரும்பாலான தூத்துகுடி மக்கள் ரஜினியின் வருகை தங்களுக்கு பெரும் ஆறுதல் என்று நினைத்த நிலையில் சந்தோஷ் என்ற இளைஞர் மட்டும் ரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி கேட்டார். இதனாலேயே அவர் வைரலானார். 
 
இந்நிலையில், கல்லூரி முன்பு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சிலர் மாணவர்களிடம் கொடுத்த விவகாரத்தில் சந்தோஷூக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் இரவு முழுவதும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரிராகவன் மற்றும் தாளமுத்துநகர் மைக்கேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளது மேலும் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்