சபரிமலைக்கு பெண்கள் செல்ல கூடாது - தேமுதிக புதிய பொருளாளர்’ பிரேமலதா அதிரடி ..!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:17 IST)
சபரிமலைக்கு பெண்கள் செலவதை தேமுதிக ஆதரிக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்.  சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கான அனுமதியும் மறுப்பும்  கேரளாவில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் அரசியல் கட்சினர் பலரும் பல விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். 
இந்த நிலையில் தேமுதிக-வின் பொருளாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரேமலதா விஜயகாந்த்,  சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தேமுதிக ஆதரிக்கவில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார். 
 
மேலும், பல காலமாக சபரிமலையில் கடைபிடித்து வரும் நடைமுறைகளை ஒருபோதும் மாற்றக்கூடாது என்றும், எந்த ஒரு மதத்தின் கொள்கைகளை உடைப்பதில் தேமுதிக-வுக்கு உடன்பாடு ஏதும் இல்லை என்றும் கூறிய பிரேமலதா , ஜாதி, மத அடிப்படையில் மனித குலத்தை பிரிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்