”கடைசியா ஒரு தடவ வா.. இல்லைன்னா அந்த வீடியோவ..??” - இளம்பெண்ணை மிரட்டி மாறி மாறி சீரழித்த இளைஞர்கள்!

Prasanth Karthick

புதன், 8 மே 2024 (18:32 IST)
ராமநாதபுரத்தில் இளம்பெண்ணை நிர்வாணமாக படம்பிடித்து அதை வைத்து மிரட்டி பல ஆண்டுகளாக இளைஞர்கள் சிலர் அந்த பெண்ணை வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இளைஞர்கள் சிலர் தன்னை வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து வன்கொடுமை செய்து வருவதாக 19 வயது இளம்பெண் ஒருவர் சமீபத்தில் திருவாடனை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி, திருவாடனையை சேர்ந்த சமய சந்துரு என்ற இளைஞரும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு 18 வயதுக்கும் குறைவாகவே இருந்துள்ளது.

அப்போது அடிக்கடி அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்ற சந்துரு அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை சந்துருவின் நண்பன் தனுஷ் என்பவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அதற்கு பிறகு தனுஷ் இளம்பெண்ணை வன்கொடுமை செய்ய அதை சந்துரு செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவை வைத்துக் கொண்டு இருவரும் தங்களுக்கு தோன்றிய போதெல்லாம் இளம்பெண்ணை ஆசைக்கு இணங்க சொல்வதும், மறுத்தால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதுமாக இருந்துள்ளனர்.

ALSO READ: மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்.. வலது கையில் கட்டு இருந்ததா?

சமீபத்தில் வேறு ஒரு 17 வயது சிறுவனும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளான். இவர்களின் இந்த கொடுமைகளுக்கு நடுவே அந்த இளம்பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயமாகியுள்ளது. அதன் பின்னர் அவர்கள் அழைப்பு விடுத்தபோது தனக்கு திருமணமாக போகிறது என்றும், தன்னை விட்டுவிடும்படியும் அந்த இளம்பெண் கெஞ்சியுள்ளார். அதற்கு அவர்கள் வீடியோவை வெளியிடாமல் இருக்க பணமும், நகையும் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அந்த இளம்பெண் எதுவும் தராததால் அந்த பெண்ணின் வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியும்படி லீக் செய்துள்ளனர். இதனால் அந்த பெண்ணின் திருமணமும் நின்றுபோயுள்ளது. தன் வாழ்க்கையே சீரழிந்ததால் விரக்தியடைந்த அந்த இளம்பெண் இறுதியாக மகளிர் காவல் நிலையத்தில் மேற்படி தகவல்களை புகாராக எழுதி கொடுத்துள்ளார்.

அதன்படி அதிரடி நடவடிக்கை எடுத்த மகளிர் காவல்துறையினர் சந்துருவையும், தனுஷையும் கைது செய்துள்ளனர். மேலும் இளம்பெண்ணை மூன்றாவதாக வன்கொடுமை செய்த 17 வயது இளைஞரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்