குற்றச்செயகளில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 56,000 பேர் கைது! இலங்கையில் பரபரப்பு

Sinoj

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (21:08 IST)
இலங்கை நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிப்பட்டும் 56,000 பேரை 2 நாட்களில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நமது அண்டை நாடான இலங்கையில், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய குற்றத்தடுப்பு நடவடிக்கையை இலங்கை போலீஸார் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் மேற்கொண்டனர்.

இதன் முலம் நாடு முழுவதும் குற்றச்செயகளில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 56,000  நபர்களை 50 நாட்களில் போலீஸார் கைது செய்ததாக அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் 49,558 பேர் போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்காகவும், மற்றவர்கள் மற்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், கைதானவர்களிடம் இருந்து 2.3 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துகள் பறிமுகல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களிடம் இக்ருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் மதிப்பு 25 மில்லியன் டாலர்கள் என தெரிவித்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்