பெற்ற மகளை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர தந்தை

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (15:22 IST)
தெலுங்கானாவில் மனைவி மீதான கோபத்தில் பெற்ற மகளை பிளேடால் கழுத்தை அறுத்து கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம்  ஹைதராபாத்தில் சாந்தா நகரில் வசிப்பவர்  சந்திரசேகர். இவரது மனைவி ஹிமாபிந்து. இத்தம்பதிக்கு  கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதிக்கு 9 வயதில் மோக்சிதா என்ற மகள் இருந்தார். அமெரிக்க நாட்டிலுள்ள ஒரு  நிறுவனத்தில் சாப்ட்வேர் ஊழியராகப் பணியாற்றி வந்த இருவரும் கடந்த  3 ஆண்டுகளுக்கு முன்  ஹைதராபாத்திற்கு வந்து அங்கேயே செட்டில் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில், தம்பதியர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஹிமாபிந்து தன் பெற்றோர் மற்றும் மகளுடன்  பிஹெச்இஎல் பகுதியில் வசித்து வருகிறார். மனைவி,  மகள் பிரிவு, 3 மாதத்திற்கு முன் வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் மன  உளைச்சலில் இருந்த சந்திரசேகர்,   கடந்த வெள்ளிக்கிழமை தன் மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, காரில் அவரை ஏற்றிக் கொண்டு ஒரு மறைவான இடத்தில் வைத்து, பேப்பர் கட்டர், பிளேட் ஆகியவற்றால் மகள் மோக்சிதாவின்  கழுத்தை அறுத்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சந்திரசேகரை போலீஸார் கைது செய்து  போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், அவர் தன் 'மனைவியின் மகிழ்ச்சிக்கு முடிவுகட்டுவதற்காக மகளைக் கொன்றதாகக்' தகவல் வெளியாகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்