இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்த பேரணியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பேரணி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்து, தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி செல்லும்.
பேரணி முடிந்த பிறகு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்களுக்கு டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் இரவு விருந்து அளிக்கவுள்ளார். இது, கூட்டணித் தலைவர்களை ஒன்றிணைக்கும் மற்றொரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.