டிவிஎஸ் XL-ல் கைக்குழந்தையோடு… சமூக வலைதளத்தை ஈர்த்த புகைப்படம் !

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (08:37 IST)
தனது கைக்குழந்தையோடு டிவிஸ் எக்ஸ்.எல். பைக்கில் உணவு டெலிவரி செய்ய செல்லும் ஒரு பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பெருநகரங்களில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் தற்போது பெண்களையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.  இரு சக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்த பெண்கள் பார்ட் டைமாகவோ அல்லது முழுநேர வேலையாகவோ இதை செய்து வருகின்றனர்.

இதுபோல உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் பெண் இப்போது சமூகவலைதளத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கில் முன்னால் கைக்குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு உணவு டெலிவரி செய்ய செல்கிறார். இதை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் அப்லோட் செய்ய அனைவரையும் நெகிழ வைத்துள்ளது அந்த புகைப்படம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்