சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு.. பரிதாப மரணம்..

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (08:31 IST)
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
 
ரயிலில் பழ வியாபாரம் செய்து வரும் ராஜேஸ்வரி என்ற பெண் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய போது அதே ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர், ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரயிலில் தப்பிச் சென்றுள்ளார்
 
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சரமாரியாக வெட்டப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ரயிலில் வியாபாரம் செய்யும் ஆண், பெண் வியாபாரிகள் அனைவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்