சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

திங்கள், 19 மே 2025 (16:59 IST)
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இன்று காலை பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ் என்பவரின் மனைவி திவ்யா என்ற 30 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன்  அங்கு வந்திருந்தார். திடீரென பிளாஸ்க் ஒன்றிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
 
தனது கணவர் மீது வியாசர்பாடி போலீசார் பொய்யான வழக்கை  பதிவு செய்திருப்பதாக  குற்றம் சாட்டிய திவ்யா, புகார் கொடுக்க எண்ணியபோதும், எழுத படிக்கத் தெரியாத காரணத்தால்  அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
 
உடனே அவசர நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் தண்ணீர் தெளித்து அவரை தடுத்து உயிர் பாதுகாத்தனர். இது தொடர்பாக தொடங்கிய விசாரணையில், தினேஷ் மீது ஏற்கெனவே ஒரு கஞ்சா வழக்கு உள்ளது என்பது தெரியவந்தது.
 
மேலும், வியாசர்பாடி போலீசில் உள்ள சில அதிகாரிகள், "கஞ்சா விற்பனை செய்பவர்கள் யார் என தெரியப்படுத்தாவிட்டால் பொய் வழக்கில் சிறை செல்வாய்" என மிரட்டியதாக திவ்யா தெரிவித்தார். இதனால் மனமுடைந்த திவ்யா, தற்கொலை முயற்சிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்