டாஸ்மாக் நிறுவனம் மூலம் ரூ.1,000 கோடிக்கான வருவாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை டாஸ்மாக் இயக்குநர் விசாகன், மற்றும் திரை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் வீடுகளுடன் மேலும் எட்டு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சனிக்கிழமையிலும் 9 இடங்களில் சோதனை தொடரப்பட்டது. இச்சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு, தொழிலதிபர் தேவகுமார், அரசு ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.