ராஷ்மிகா படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா..!

vnoth

திங்கள், 9 டிசம்பர் 2024 (16:33 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இப்போது அவர் பாலிவுட்டில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவர் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக விலகிவிடவே ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ராஷ்மிகாவின் பார்வையில் காதலை கவித்துவமாக சொல்லும் ஒரு டீசராக இது அமைந்துள்ளது. ராஷ்மிகாவின் அழகியக் காட்சி துணுக்குகளுக்குப் பின்னணியில் காதலை வெளிப்படுத்தும் ஆண்குரல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்