வில்லிவாக்கத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும், பாஜக மேலிடம் அதை செய்யும் என்று நம்புவதாகவும் கூறினார். ஓ.பி.எஸ். மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் அது தனக்கு மகிழ்ச்சி தரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தினகரன், தங்கள் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கடந்த ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியுடன் உறவு பாராட்டி அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் ஒருபோதும் இல்லை என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.