சென்னை புத்தக காட்சியை விஜய் திறந்து வைக்கின்றாரா? பபாசி விளக்கம்..!

Siva

திங்கள், 9 டிசம்பர் 2024 (16:49 IST)
சென்னை புத்தக கண்காட்சியை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திறந்து வைப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் இது குறித்து பபாசி நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

டிசம்பர் 27ஆம் தேதி புத்தக காட்சி சென்னையில் தொடங்க இருக்கும் நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைப்பதற்கு ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பபாசி நிர்வாகிகள் இது குறித்து பேட்டி அளித்த போது செய்தியாளர்கள் ’தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் புத்தக தொடக்க விழாவில் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு புத்தக கண்காட்சிக்கு ஒரு வாசகராக விஜய் வந்தால் வரவேற்கப்படுவார் என்று நிர்வாகிகள் கூறினர்.

ஆனால் சில ஊடகங்கள் இதை விஜய் தான் திறந்து வைக்க இருப்பதாக செய்தி வெளியிட்டிருப்பதை அடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மீண்டும் இது குறித்து விளக்கம் அளித்த பபாசி நிர்வாகிகள் ’புத்தக காட்சிக்கு விஜய் வரும் பட்சத்தில் அவரை வரவேற்பதாக மட்டுமே பபாசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும் புத்தகக் காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தான் தொடங்கி வைக்க உள்ளனர் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனால் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்