அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை இருக்குமா? வானிலை மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:39 IST)
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் முக்கிய பருவமான வடகிழக்குப் பருவமழை சில நாட்களுக்கு முன் ஆரம்பித்தது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் மக்கள் பாதிப்படைந்தனர்.

இந்த  நிலையில்,  அடுத்த 5 நாட்களுக்கு  தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும்,  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ALSO READ: திமுக பொய் சொல்கிறது: மழைநீர் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

இன்று தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  16,17 மற்றும் ஆகிய தேதிகளில்   தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடி மின்னடலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்