ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சகாயம் ஐஏஎஸ்: நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (16:12 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் அது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


 
 
சென்னை சுங்கம், கலால், சேவை வரிக்கான தீர்ப்பாயத்தில் உதவி ஆணையராக பணியாற்றிய திருவொற்றியூரை சேர்ந்த பி.பாலமுருகன் என்பவர் இந்த பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
 
அதில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டுமென ஜனவரி மாதம் சேலம் மாவட்ட் ஆட்சியர் மூலமாக அப்போது தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்துக்கு மனு அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.
 
மேலும் அப்பல்லோ, ஆளுநர், பிரதமர் உள்ளிட்டோரிடம் பல கேள்விகள் எழுவதாக குறிப்பிட்டுள்ளார். அப்பல்லோ கொண்டு வரும் முன்னரோ அல்லது சேர்க்கப்பட்ட இரண்டு நாட்களிலோ இறந்திருக்க வேண்டும். ஜெயலலிதா இயற்கை மரணம் அடையவில்லை, அதேசமயம் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குடன் சேர்த்து இந்த வழக்கை விசாரிப்பதாக கூறி வழக்கை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அடுத்த கட்டுரையில்