மோடி குஜராத் முதல்வராக இருந்தால் ஆளுநரின் செயலை அனுமதிப்பாரா: மாதவன் கேள்வி!

வியாழன், 16 நவம்பர் 2017 (13:16 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆய்வு நடத்தியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த நடவடிக்கைக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


 
 
மாநில சுயாட்சிக்கு எதிராக சட்டத்தை மீறி வரம்பு மீறி ஆளுநர் செயல்படுவதாக பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளில், செயல்களில் தலையிடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. டெல்லி, புதுவைக்கு அடுத்து தமிழகத்தில் இக்கலாசாரம் பரவத் துவங்கியுள்ளது.
 
ஆளுநர் அதிகாரிகளுடன் நடத்தும் ஆய்வு பணிகள் கூட்டாச்சிக்கு எதிரானது .  அவர் தம்முடைய அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார். அதிகாரிகளை கூட்டி ஆலோசனை கூட்டம் நடத்துவது மாநில சுயாட்சியில் தலையிடுவது ஆகும்.  இது கண்டிக்கத்தக்கது.
 
மாநில செயல்பாடுகளில் தலையிட வேண்டும் என்றால் தேர்தலில் போட்டியிட்டு,  ஜெயித்துப், பின் செயல்படலாம். நம் அம்மா இருந்திருந்தால் இவ்வாறு ஏதேனும் அனுமதிக்கபடடிருக்குமா? அல்லது மோடி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருப்பாராயின் ஆளுநரின் செயலை அனுமதித்திருப்பாரா?  ஒருவேளை, கவர்னர் ஆட்சிக்கு வருவதற்கு இது  ஒத்திகையா?  என மாதவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்