கமலுக்கு எதிரான வழக்கு: போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு!

வியாழன், 16 நவம்பர் 2017 (12:29 IST)
நடிகர் கமல்ஹாசன் இந்துக்கள் குறித்து தவறான கருத்துக்கள் கூறியதாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒரு வாரத்தில்பதில் அளிக்க சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் குறித்து அதிரடி கருத்துக்கள் கூறி வருவதால் அவரது பெயர் ஊடகங்களில் அதிகமாக அடிபடுகிறது. மேலும் அவர் விரைவில் கட்சி ஆரம்பித்து அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால் அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துகின்றது.
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் இந்துக்கள் குறித்து தவறான கருத்து கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து கமல்ஹாசன் இந்துக்கள் குறித்து தவறான கருத்துக்கள் வெளியிட்டதாக கமல் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் இதுகுறித்து பதில் அளிக் வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்