மணல் விற்பனையை நிறுத்தும் அரசு டாஸ்மாக் விற்பனையை நிறுத்துமா?

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (19:43 IST)
தேர்தலை காரணம் காட்டி ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை தமிழக அரசு நிறுத்தியுள்ளதற்கு  தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
தேர்தல் காரணமாக ஆன்லைன் சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் இன்று மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட தேர்தல் அதிகாரி இதுகுறித்து விரைவில் முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
 
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தேர்தலை காரணம் காட்டி மணம் விற்பனையை நிறுத்தும் அரசு, டாஸ்மாக் விற்பனையை நிறுத்துமா' என்ற கேள்வி எழுப்பினர். மேலும் மணல் விற்பனையை நிறுத்தியதால் கட்டுமான தொழில் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், அந்த தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளிகள் சிரமம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்