நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்ததால் பின்னர் அந்த முகநூல் பதிவை நீக்கிவிட்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.இருப்பினும் எஸ்.வி.சேகருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை பத்திரிகையாளர்கள் நடத்தினர்.
இந்நிலையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழி பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பிஜேபி உறுப்பினர் எஸ்வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது என்றும் இழிவாக ஒரு பதிவு செய்துவிட்டு, பின்னர் அதை நீக்குவதும், வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது.