திமுக ஓட்டு வேறு கட்சிக்கு போகாது என்ற வாதம் சரியா?

திங்கள், 25 டிசம்பர் 2017 (05:20 IST)
எந்த அலை அடித்தாலும் திமுக ஓட்டும், கம்யூனிஸ்ட் ஓட்டும் வேறு கட்சிக்கு போகாது என்பது தான் தமிழகத்தின் கடந்த கால வரலாறு, ஆனால் ஜெயலலிதா, கருணாநிதி களத்தில் இல்லாத முதல் தேர்தலான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த ஃபார்முலா முதல்முறையாக அடிபட்டுள்ளது.

ஜெயலலிதாவை எதிர்த்து கடந்த 2016ஆம் ஆண்டு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழன், 57,673 ஓட்டுகள் பெற்றார். ஆனால் ஜெயலலிதா இல்லாத அதிமுக, ஆட்சி மீது அதிருப்தி, அதிமுகவில் பிளவு, கூட்டணி கட்சிகளின் பலம் மற்றும் பிரச்சாரம் இவ்வளவு இருந்தும் திமுக வெறும் 29,481 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. மேலும் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் கூட பெறவில்லை என்பதால் டெபாசிட்டையும் இழந்தது. இந்த படுதோல்வியால் திமுகவின் ஓட்டுக்கள் வேறு கட்சிக்கு போகாது என்ற வாதம் தவிடுபொடியாகியுள்ளதா? அல்லது பணத்திற்கு திமுக தொண்டர்களும் அடிமையாகிவிட்டார்களா? என்பதை திமுக தலைமை ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

அதிமுக இனி அவ்வளவுதான் என்று கூறப்பட்டு வரும் நிலையில் திமுக நிலையும் அதுதானா? என்ற கேள்வி எழாமல் இல்லை. 50ஆண்டுகால திராவிட கட்சிகளின் மேல் உள்ள கோபத்தைத்தான் இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காட்டுவதாக எண்ண தோன்றுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்