வெளியான ஆடியோ : யார் இந்த நிர்மலா தேவி?

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (10:52 IST)
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 
தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், நிர்மலா தேவி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
சொக்கலிங்கபுரத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா தேவியின் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ஆவர். அவர் அருப்புகோட்டையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின் மதுரை பல்கலைகழகத்தில் மேற்படிப்பு முடித்தார். (எம்.ஏ. எம்.பில். பி.ஹெச்.டி) கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் கடந்த 2008ம் ஆண்டு உதவி பேராசிரியையாக பணியில் சேர்ந்தார். இவரின் கணவர் நகராட்சியில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்தவர். 2 வருடங்களுக்கு முன்பு நிர்மலா தேவி விவாகரத்து செய்தார். நிர்மலா தேவியின் இரு மகள்களும் கணவரின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
 
கைது செய்யப்பட்ட அவரின் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்