யார் அந்த சார்? Vs இவன் தான் அந்த சார்! சட்டமன்றத்தில் அதிமுக vs திமுக கோஷம்!

Prasanth Karthick
வெள்ளி, 10 ஜனவரி 2025 (10:32 IST)

இன்று சட்டமன்றத்திற்கு வந்த அதிமுகவினரும், திமுகவினரும், யார் அந்த சார்? இவன் தான் அந்த சார்? என எழுப்பிய கோஷங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து யார் அந்த சார்? என்று பொறித்த பேட்ஜ்களை அதிமுகவினர் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தபடி இருந்தனர்.

 

இந்நிலையில் சில ஆண்டுகள் முன்னதாக அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் சுதாகர் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து யார் அந்த சார்? என்ற அதிமுகவின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இவன் தான் அந்த சார்! என்று அதிமுக பிரமுகரின் படம் பொறித்த போஸ்டரை பல இடங்களில் திமுக ஐடி விங் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
 

ALSO READ: குழந்தை பெற்றெடுத்தால் 84 ஆயிரம் ரூபாய் பரிசு: அதிரடி அறிவிப்பு..!

 

இன்று சட்டசபைக்கு வந்த திமுகவினர் இவன் தான் அந்த சார்? போஸ்டரோடே வளாகத்திற்கு வந்து கோஷங்களை இட்டனர். எனினும் அவர்கள் இந்த போஸ்டர்களை சட்டமன்றத்திற்குள் எடுத்து செல்லவில்லை.

 

சட்டமன்றத்தில் யார் அந்த சார்? இவன் தான் அந்த சார்? என அதிமுக, திமுக மோதிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்