ராகவா லாரன்ஸுக்கும் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்: பொளந்து கட்டும் சீமான்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (15:09 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை நாம் தமிழர் கட்சியின் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.


 
 
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். நடிகர்கள், அரசியல்வாதிகள் என யாரையும் அனுமதிக்காத மாணவர்கள் ராகவா லாரன்ஸ் போன்ற ஒரு சிலரையே அனுமதித்தனர்.
 
மாணவர்களின் தொடர் போராட்டத்தால் அடிபணிந்த அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் நிரந்தர தீர்வு கிடைக்காமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனையடுத்து காவல்துறை மூலம் அரசு மாணவர்களின் போரட்டத்தை கலைத்தது. இதனையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களை காவல்துறை கடுமையாக தாக்கியதை வன்மையாக கண்டித்த அவர், நாளை போலீசாரின் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், மாணவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ் யார் என்று கேட்ட சீமான், அவருக்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது, மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அவர்களே முடித்துக் கொள்ள வேண்டும். ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறாரா என்று சீமான் காட்டமாக பேசினார்.
அடுத்த கட்டுரையில்