எனக்கு ஜாதகம் சொல்ல குஷ்பு யார்? திருநாவுக்கரசர் கேள்வி

Webdunia
வியாழன், 17 மே 2018 (10:42 IST)
கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் கட்சியின் தலைமைக்கு சென்று கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் காங்கிரஸ் கடந்த சில மாதங்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தலைமையும் திருநாவுக்கரசரை மாற்ற முடிவு செய்துவிட்டதாகவும், புதிய தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம் மற்றும் குஷ்பு பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விரைவில் புதியவர் நியமனம் செய்யப்படுவார் என்று குஷ்பு சமீபத்தில் கூறியிருந்தார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறியபோது, 'நான் ராகுல்காந்தியின் நேரடி உத்தரவின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?. 
 
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்று ஜாதகம் சொல்ல குஷ்பு யார்? அவர் ஒரு நடிகை. திரைபபடங்களில் வேண்டுமானால் அவரது நடிப்பு எடுபடும், ஆனால் காங்கிரஸில் எடுபடாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் குஷ்பு இதுபோன்று பக்குவற்ற முறையில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் திமுகவில் இருந்தபோது முட்டை வீச்சு, செருப்பு வீச்சு நடந்தது போல் காங்கிரஸ் கட்சியினர்களும் வீசும் நிலை ஏற்படும் என்ரு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்