ஐரோப்பா கண்டத்தில் 5,595 அடி உயமுள்ள எல்ப்ரஸ் மலையை ஏறி சாதனை படைத்த தமிழக வீரர்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து!

J.Durai
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:20 IST)
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கிராமம் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன்.
 
இவர் ஈரோடு ஐரோப்பா கண்டத்தில் உள்ள மிக உயரமான மலையாள எல்ப்ரஸ் மலையை ஏறி தமிழகத்தை முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 
5 ஆயிரத்து 595 மீட்டர் உயரமுள்ள மலை ஏறி சாதனை படைத்து தமிழகம் திரும்பிய மலை ஏறும் வீரருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.
 
ஏற்கனவே 5 கண்டங்களில் உள்ள மிக உயர்ந்த மலைகளை ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி, சாதனை படைத்த வீரருக்கு மலர்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்றார்.
 
அதேபோல் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் சாதனை படைத்த வெங்கட சுப்பிரமணியனுக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை பறிமாறிகொண்டார்.
 
இது குறித்து சாதனை படைத்த வெங்கட சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்......
 
எனது அப்பா கரி காட்டு விவசாயி, அவர் பல அவமானங்களை சந்தித்துள்ளார். அவருக்காக எட்டாத உயரத்தை அடைய வேண்டும் என விரும்பினேன். அதன்படி மிக உயரமான மலையை ஏற முடிவு செய்து மலை ஏறினேன். உலகத்தில் உள்ள எழு கண்டங்களில் உள்ள உயரமான மலையை ஏற அடுத்து திட்டமிட்டுள்ளேன் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்