தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் 5706 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 43,63,328 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு எங்களுத்தான் உள்ளது என ஓபிஎஸ் அணி வாதிட்டனர். இதை வைத்து சசி தரப்பு வக்கீல் அரிமா, சசி அணிக்கே ஆதரவு அதிகமாக உள்ளது என தெரிவித்தார். இதனால் ஓபிஎஸ் அணி அதிர்ச்சியடைந்தது.
இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் இடையே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வாதங்கள் நடைப்பெற்று வருகிறது.
இதில் ஓபிஎஸ் அணி தரப்பில் 5706 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 43,63,328 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு எங்களுத்தான் உள்ளது என ஓபிஎஸ் அணி வாதிட்டனர். பின்னர் வாதிட்ட சசிகலா தரப்பு வக்கீல் அரிமா, ஓபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தார். அவர் கூறியதாவது:-
அதிமுக கட்சியின் தொண்டர்கள் ஒன்றரை கோடிபேர் உள்ளனர். ஓபிஎஸ் அணியினர் 43,63,328 பேர் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகின்றனர். இதன்மூலம் ஓபிஎஸ் அணி சசிகலாவுக்குதான் ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்கின்றனர், என்றார்.
இதில் ஓபிஎஸ் அணி அதிர்ந்துபோனது. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகம்தான் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.