இளைஞர் சமுதாயம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது- டிடிவி தினகரன்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (14:47 IST)
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற மாணவி ரயில் மீது தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற மாணவி ரயில் மீது தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இந்த வழக்கை  சிபிசிஐடி  விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு ரயில்வே காவல்துறையினர் இருந்து சிபிசிஐடிக்கு மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ரயில்வேதுறை காவல்துறையினர் சிபிசிஐடிக்கு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியனது.

இதுகுறித்து,  அமமுக தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், சென்னையில் கல்லூரி மாணவி சத்யா கொடூரமான முறையில் இரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. இளைஞர் சமுதாயம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்ற கவலையையும் ஏற்படுத்துகிறது.

பள்ளி, கல்லூரிகளில் அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங்களையும் பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். அதே போன்று, ஒவ்வொரு தனி மனிதருக்கும் இதில் பங்கிருக்கிறது.

ALSO READ: கல்லூரி மாணவி சத்யா படுகொலை: கைதான சதீஷ்-க்கு அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவல்

பெண்களின் உணர்வுகளை எப்படி மதித்து நடக்க வேண்டும் என்பதை ஆண் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டியது தங்கள் கடமை என்பதை பெற்றோரும் மறந்துவிடக் கூடாது’’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்