அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு எப்போது தேர்தல்?

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (00:17 IST)
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் நவம்பரில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
 

 
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பிரச்சனைகளால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.
 
அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அடுத்து 3 தொகுதிகளும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன.
 
காலியாக உள்ள இந்த மூன்று தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். தலைமை தேர்தல் ஆணையம் நடத்தை விதிப்படி இந்த 3 தொகுதிகளிலும் வரும் நவம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். 
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, அதோடு இந்த 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
காலியாகவுள்ள தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப் பட வேண்டும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலை இணைந்து நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு.
 
3 தொகுதிக்கான தேர்தல் தேதியை அக்டோபரில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடும். பின்னர் நவம்பரில் தேர்தல் நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்