டிஜிட்டல் இந்தியாவைவிட திருந்திய இந்தியா தான் தேவை- நடிகர் சத்யராஜ்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (14:02 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவனின் 61 வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி, இயக்குனர் பா. ரஞ்சித்,  நடிகர் கமல்ஹாசன், அரசியல் தலைவர்கள்  உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளை தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், 60 வது அகவை விழாவில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ், ‘’வயதில் நான் பெரியவன் தான்… ஆனால் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் ..60வயது முடிந்து 61 வது வயதில் அடியெடுத்து வைக்கும் என் அன்புத் தம்பி எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்கு என் வாழ்த்துகள்.  நம்முடைய நாட்டில்  சனாதனத்தை வேரறுக்கும் விதமாகக் கொண்டிருந்தால் ..அப்படி, மக்களுக்கு  உழைப்பதையே மகிழ்ச்சியாக கொண்டு  வாழ்ந்து வரும் திருமாவளவன், ஜப்பானிய இக்கியோ மக்களை தோற்கடிக்கும் விதமாக  அந்த மகிழ்ச்சிப் பயணத்திலேயே 100 வயதைத் தாண்டி வாழ முடியும்…என்று வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ’’டிஜிட்டல் இந்தியாவைவிட சமத்துவ திருந்திய இந்தியாதான் வரவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்