மிக்ஜாம் புயலால் சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மத்திய அரசிடம் உதவி கேட்டு கடிதம் எழுதுவதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் தற்போதைய நிலவரம் பற்றி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளருக்குப் பேட்டியளித்துள்ளார்.
அதில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அழ மழை நீட் வடியத் தொடங்கிவிட்டது. மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்படுள்ளனர்.
மின்சாரம் வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்தோரையும் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும், தேசிய பேரியர் மீட்பு படையினர் சார்பில் 34 குழுக்கள் சென்னையில் பணியில் உள்ளதாககவும், இந்த மழை வெள்ளத்தில் சென்னையில் 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.