தமிழுக்காக திமுக என்ன செய்தது? பாஜக தலைவர் ஜேபி. நட்டா கேள்வி

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (19:10 IST)
திமுக தமிழ் மொழிக்காக என்ன செய்துள்ளது என்று   பாஜக தேசியத் தலைவர் ஜே.பி, நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த ஆட்சியின் மீது,  அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து  விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், தேசிய தலைவர்   ஜே.பி. நட்டா இன்று காரைக்குடியில் நடந்த பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது, திமுக என்றால்  குடும்ப அரசியல் பணம், வசூல், கட்டப் பஞ்சாயத்துத்தா. மாநில உரிமைப் பற்றி பேசுகின்ற திமுக தமிழ் மொழிக்காக என்ன செய்துள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில், விரைவில் தாமரை மலரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக பாஜக தன் டுவிட்டர் பக்கத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துள்ளன என்று கூறியது தமிழகத்தில் சர்ச்சையாகி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்