டிசம்பர் மாதம் ஊரடங்கு தளர்வில் என்னென்ன அறிவிப்புகள்? முதல்வர் ஆலோசனை

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (07:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தற்போது தமிழகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியுள்ளது 
 
இருப்பினும் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதும் மெரினா கடற்கரை போன்ற பொது மக்கள் கூடும் இடத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார் 
டிசம்பர் மாதம் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்றும் அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அனேகமாக டிசம்பர் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் மெரினா கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடத்திற்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்