மேலடுக்கு சுழற்சி காற்றின் வேகம் வட தமிழகம் அருகே இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அதன் பிறகு அந்த மேலடுக்கு சுழற்சி படிப்படியாக அரபிக் கடலை நோக்கி செல்லும் என்றும் தெரிவித்தார்.
சென்னையை பொருத்தவரை பகலில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார் அக்டோபரில் குறைவான மழை தான் தமிழகத்தின் பெய்துள்ளது என்றும் நவம்பரில் ஓரளவுக்கு மழை பெய்து உள்ளதால் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்