சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு என தகவல்..!

செவ்வாய், 21 நவம்பர் 2023 (07:22 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததை அடுத்து  தட்பவெப்ப நிலை மாறி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை மற்றும்  காற்றின் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, பாரி முனை, சைதாப்பேட்டை, தியாகராய நகர், அடையாறு, கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை பெய்து வருவதால் சாலைகளில் நடமாட்டம் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் விடிய விடிய மழை பெய்த போதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்